/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/120_20.jpg)
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான பாவெல் நவகீதன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ “வி1”என்ற படத்தில் நடித்திருந்தார். க்ரைம் தில்லார்ஜெனரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. புதுமுகமாக இருந்தாலும் நடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரின் கவனத்தையும்ஈர்த்தார்.
இப்படத்தைத்தொடர்ந்துநடிகர் ராம் அருண் கேஸ்ட்ரோ அறிமுக இயக்குநர் ராஜேஷ் பாலசந்திரன்இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஐடா பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் தங்க மீனா தயாரிக்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகும் இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனிடம் பணியாற்றிய நித்யானந்தம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். பரியேறும் பெருமாள், ராக்கி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராமு தங்கராஜ் இப்படத்தின் கலை பணியாற்றவுள்ளார். இப்படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் விரைவில் மற்ற நடிகர்கள் குறித்தஅறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)